ஹாஃபிழ் ஜுனைதின் குடும்பத்திற்கு சாகித்ய அகாடமி விருது பணத்தை வழங்கிய மலையாள எழுத்தாளர்

0

ஓடும் ரயிலில் மாட்டிறைச்சி உண்பவர் என்று கூறப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட ஹாஃபிழ் ஜுனைதின் குடும்பத்திற்கு தனது சாகித்திய அகாடமி விருது பரிசுத் தொகையில் 99,997 ரூபாய் பணத்தை மலையாள எழுத்தாளர் ரமானுன்னி வழங்கியுள்ளார்.

தனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததும் ஜுனைத்தின் தாயார் சாய்ரா பேகத்தை சந்தித்த அவர் அந்த தொகையை அவரிடம் வழங்கியுள்ளார். பரிசுத் தொகையில் மீதமுள்ள மூன்று ரூபாயை தன்னுடன் வைத்துக்கொண்ட அவர், அது தனது படைப்பான தெய்வத்திண்டே புஸ்தகம்   நூலுக்கு கிடைத்த விருது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முஸ்லிம் என்ற காரணத்தால் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு உதவியதால் தான் ஒரு உண்மையான ஹிந்து என்று பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “நான் ஒரு உண்மையான ஹிந்து, அதனை நான் இங்கு பிரகடனப் படுத்த விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

Comments are closed.