ஹாஃபிழ் ஜுனைத்தின் கொலைப் பின்னனியில் மாட்டிறைச்சி வதந்தி

0

ரயிலில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட 16 வயது ஹாஃபிழ் ஜுனைதின் கொலையாளிகளில் ஒருவனை காவல்துறை கைது செய்துள்ளது. அவனிடம் ஜுனைத் மீதான தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு “அந்த முஸ்லிம் இளைஞர்கள் மாட்டிறைச்சி உண்டதாக என் நண்பர்கள் கூறினார்கள்” என்று கூறியுள்ளான்.

பத்திரிகையாளர்களிடம் “என் நண்பர்கள் இதனை கூறினார்கள்” என்றும் “நான் குடி போதையில்” இருந்தேன்” என்றும் கூறியுள்ளான். ஆனால் காவல்துறையின் புகாரிலோ அல்லது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முதல் தகவல் அறிக்கையிலோ மாட்டிறைச்சி குறிப்பிடப்படவில்லை. காவல்துறையின் கூற்றுப்படி இவர்களுக்கு இடையேயான மோதல் இருக்கைக்காக ஏற்பட்ட விவாதத்தை தொடர்ந்து ஏற்ப்பட்டுள்ளது என்று கூறபபடுகிறது.

இது குறித்து பள்ளபார்க் காவல்துறை கண்காணிப்பாளர் கமல் தீப் கோயல் தெரிவிக்கையில், “அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் குரிப்பிடப்பட்டுள்ளதைப் போல இருக்கைக்காக சண்டையிட்டுள்ளனர். அத்துடன் மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நிலைமை கைமீறி போயுள்ளது.” என்று கூறியுள்ளார்.

இவர்கள் தாக்கப்பட்ட ரயில் பெட்டி முழுவதும் ரத்தம் தோய்ந்தபடி உள்ளது. தாங்கள் தாக்கப்படும் போது ரயிலின் அவரசர சங்கிலியை இழுத்தபோதிழும் ஆது கண்டுகொள்ளப்படவில்லை என்றும் ரயில்வே காவலர்களும் தங்களின் உதவிக்கு வரவில்லை என்றும் மொஹ்சின் கூறியுள்ளார்.

Comments are closed.