ஹாஃபிழ் ஜூனைத் கான் கொலை வழக்கு: விசாரணைக்கு தடை விதித்த பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம்

0

16 வயது சிறுவனான ஹாஃபிழ் ஜுனைத் கான் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி ஜுனைத் கானின் தந்தை நீதிமன்றத்தில் முன்னர் மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு சிறப்பாக நடைபெற்று வருகிவருகிறதுரது என்றும் அதனால் விசாரணையை சிபிஐ க்கு மாற்ற தேவையில்லை என்றும் கூறியிருந்தார். (பார்க்க செய்தி)

ஜுனைத் கானின் தந்தையான ஜலாலுதீன் தனது மனுவில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 153A (மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவது), 153 B (தேசிய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிப்பது), 120 B (கிரிமினல் சதித்திட்டம் தீட்டுதல்), மற்றும் 149 (சட்டவிரோத ஒன்றுகூடல்) ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில காவல்துறை விசாரணை முறையில் குறை உள்ளது என்றும் கூறியிருந்தார்.

ஆனால் நீதிபதி இதற்கு அனுமதி மறுத்ததால் இந்த வழக்கு நீதிபதி மகேஷ் கிரோவர் மற்றும் நீதிபதி சேகர் அட்ரி அடங்கிய பெஞ்சிடம் மேல் முறையீட்டிற்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த அவர்கள் இந்த வழக்கை விசாரணையை விசாரணை நீதிமன்றம் ஒத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். இந்த விசாரணையை வருகிற ஜனவரி 11  ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

முன்னதாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி Y.S.ரத்தோர் கடந்த மாதம், மாநில கூடுதல் அட்வோகேட் ஜெனெரல் நவீன் கௌஷிக் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு உதவுகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.