ஹாஜா முஹைதீன் கொலையை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்?

0

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் காஜா முகைதீன் என்ற இளைஞர் டிசம்பர் 21 அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதனிடையே ஏர்வாடி, வள்ளியூர் உள்ளிட்ட ஊர்களின் காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 ஏர்வாடியில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய நாககுமாரி தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல்துறை ஆய்வாளராக சார்லஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு தக்கலை பகுதியில் ஆய்வளராக பணியாற்றியுள்ளார்.

பணகுடியில் பணியாற்றிய செல்வராஜ் விஜயநாராயணம் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு பணகுடிக்கு புதிய காவல்துறை ஆய்வாளராக கன்னியாகுமரியில் பணியாற்றிய ஜெயபால் பர்ணபாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 வள்ளியூரில் பணியாற்றிய பிராபாகரன் தக்கலை காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக களியக்காவிளையில் பணியாற்றிய அன்பு பிரகாஷ் வள்ளியூருக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நான்குநேரியில் பணியாற்றிய பொன்னுசாமி தட்டார்மடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு நான்குநேரியில் புதிய காவல் ஆய்வாளராக பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் பணியாற்றியவர்.

Comments are closed.