ஹாதியா வழக்கு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன.

0

கேரளா லவ் ஜிஹாத் வழக்கு என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு ஊடங்கங்களால் வெறுப்புப் பரப்புரை செய்யப்பட்ட ஹாதியா வழக்கு நேற்று உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இத வழக்கில் பல தரப்பு வாக்குமூலங்களை கேட்டறிந்த நீதிமன்றம் இவ்வழக்கில் மிக முக்கியமான சாட்சியமான ஹாதியாவின் கருத்தை இதுவரை கேட்காமல் இருந்தது. அதனால் நேற்று அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்த நீதிமன்றம் முனனர் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அப்போது ஹாதியாவின் தந்தை அசோகனின் வழக்கறிஞர் மறுத்தார். மேலும் ஹாதியாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆயினும் நீதிபதி ஹாதியவை நேரில் ஆஜர் படுத்த உத்தரவிடவே 25 ஆம் தேதி ஹாதியா விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விமான நிலையம் செல்லும் போது பத்திரிகையாளர்களிடம் தான் ஒரு முஸ்லிம் என்றும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றவில்லை என்றும் தனது சொந்த விருப்பத்திலேயே தான் மதம் மாறியதாகவும், தனக்கு தனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அது வரை ஹாதியா ஏமாற்றப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார் என்று பரப்புரை செய்து வந்த ஊடகங்களுக்கு ஹாதியாவின் இந்த பதில் பெரும் ஏமாற்றமாகப் போனது. இந்நிலையில் நேற்றைய விசாரணைக்கு ஹாதியா நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட போது அசோகனின் வழக்கறிஞர், ஹாதியாவை நேரில் விசாரிக்க கூடாது என்று மீண்டும் வலியுறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஹாதியாவின் கணவர் ஷஃபின் ஜஹானின் வழக்கறிஞர் கபில் சிபல் ஹாதியா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கும் போது ஹாதியாவிடம் நேரிலேயே விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக டில்லி வருகையின் போது ஹாதிய பத்திரிகையாளர்களிடம் கூறியதும் தனது கணவருடன் சேர வேண்டும் என்ற அவரது உறுதியான நிலைபாடையும் அறிந்த அவரது குடும்பத்தினர் இம்முறை ஹாதிய மாண்நலம் பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தில் கூறினர். ஷஃபின் ஜஹான் வழக்கறிஞர் கபில் சிபல் இவ்வழக்கில் ஹாதியாவின் கருத்தே முக்கியமானது என்பதனால் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் ஹாதியா நீதிமன்றத்தில் அனைவரிடம் பேசுவதற்கு அனைத்து விதத்திலும் முட்டுக்கட்டை போடப்பட்டது. ஒரு நிலையில் வழக்கறிஞர் கபில் சிபலிடம் ஹாதியா StockSyndrome னால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூட உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “உங்கள் வழக்கில் அது இருக்கிறது என்று நான் கூறவில்லை. ஆனால் Stockholm Syndrome என்று ஒன்று உள்ளது.

தனிமனித சுதந்திரம் உள்ள போதிலும், ஒருவர் மேஜர் என்றாலும் இந்த Stokholm Sydrome காரணத்தால் அவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாது” என்று அவர் கூறினார். (இந்த Stockholm syndrome கருத்து ட்விட்டரில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமியால் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)

மேலும் அசோகான் தரப்பு வழக்கறிஞர், ஹாதியா மனநல ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுள்ளார். அதனால் அவரை தற்போது விசாரிபப்து சரி இல்லை என்று கூறினார். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் கபில் சிபல், “எந்த வைகயான மனநல ஆதிக்கத்தை குறித்து நாம் இங்கே பேசுகின்றோம். ஹதியா கடந்த 8 மாதங்களாக அவரது பெற்றோருடன் இருந்துள்ளார்”

இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட NIA தரப்பு  வழக்கறிஞரோ அவர்கள் சமர்பித்த 100 பக்க அறிக்கையை படித்த பின்னரே ஹாதியாவிடம் அவரது கருத்தை கேட்கவேண்டும் என்று கூறினார். இது குறித்து கேரள அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கருத்து கேட்க, “உங்கள் முன் சமர்பிக்கப்பட்ட NIA ஆவணங்கள் அவ்வளவு முக்கியமானது என்றால் நீங்கள் ஹாதியாவிடம் பேசுவதற்கு முன்னர் அந்த ஆதாரங்களை குறித்து பார்க்கலாம்” என்று கூறினார்

இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே ஹாதியா அங்கு வரவழைக்கப் பட்டுள்ளார் என்றும் இவ்வழக்கில் ஹாதியாவின் கருத்து என என்பதனை கேட்பதை விட்டுவிட்டு ஊடகங்கள் பரப்பும் விஷப் பிரச்சாரம் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம் என்று கூறினார். நீதிபதிகளோ தாங்கள் ஹாதியாவிடம் பேச மாட்டோம் என்று கூறவில்லை என்றும் ஆனால் எந்த நிலையில் ஹாதியாவிடம் பேச வேண்டும் என்று தான் தற்போதைய கேள்வி என்று கூறினார்.

ஹாதிய வழக்கில் ஹாதியா மீது சுமத்தப்பட்ட தொடர் அபாண்டங்கள், மற்றும் ஹாதியாவிடம் பேச நீதிமன்றம் தயக்கம் காட்டுவது ஆகியன குறித்து சமூக வலைதளங்களில் பலர் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இது வெறும் ஹாதியா வழக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த பெண்கள் உரிமை தொடர்பான வழக்கு என்று கருத்துகள் பகிரப்பட்டது. ஹாதியாவின் உரிமையை பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொள்ளும், கேரளா அரசு, மோடி அரசு, NIA, மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹாதியாவை பேச கூட அனுமதிக்கவில்லை என்று ட்விட்டரில் @greeshmarai என்பவர் பதிவு செய்தார். இன்னும் இதற்கு நேர் மாற்றமாக @madrasmami23 என்பவரோ தன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஹாதியாவின் இந்த உறுதியான நிலைபாட்டிற்காக ஹாதியாவை தாக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் நீதிமன்ற அலுவல் நேரம் முடிவுறுகிறது என்றும் அதனால் ஹாதியாவிடம் மறுநாள் விசாரிக்கப்படும் என்ற நிலை வந்தது. இருந்தும் வழக்கறிஞர் கபில் சிபலின் தொடர் முயற்சியால் ஹாதியா நீதிபதிகள் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவர் மலையாளத்தில் உரையாற்றவும் அதற்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க ஒருவரும் நியமிக்கப்பட்டது.

ஹாதியாவிடம் பேசத்தொடங்கிய நீதிபதிகள், அவரது பள்ளி படிப்பு மற்றும் அவரது வருக்கால திட்டங்கள் குறித்து கேட்டார். இதற்கு பதிலளித்த ஹாதியா, “எனக்கு என்னுடைய சுதந்திரம் திரும்பவும் வேண்டும்” என்று கூறினார். மேலும் தனக்கு தனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 11 மாதங்கள் தான் சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தனக்கு மனதளவில் பெருமளவு சித்திரவதைகள் தரப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். தனக்கு தன் கணவரையே பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார். மேலும் தான் தனது கணவருக்கும், மார்க்கத்திற்கும் உணமையாக இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பாதியில் தடைபட்ட அவரது கல்லூரிப்படிப்பை அரசு செலவில் தொடர அவருக்கு விருப்பமா என்று நீதிபதி கேட்க தன்னை கவனித்துக்கொள்ள தனது கணவர் இருக்கும் போது தான் ஏன் அரசு செலவில் கல்வி பயில வேண்டும் என்று பதிலளித்தார் ஹாதியா. மேலும் தான் ஒரு சிறந்த மருத்துவர் மற்றும் தேசத்தின் சிறந்த குடிமகள் என்றும் தான் தனது இஸ்லாமிய மார்கத்தை தொடர வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் ஹாதியா கூறினார்.

ஹாதியாவின் பதில்கள் இதுவரை இது லவ் ஜிஹாத் கட்டாய மதமாற்றம், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய அனைத்து விஷம பொய் பிரச்சாரங்களையும் தகர்த்தது. ஆயினும் பலமுறை தான் தன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தனது விருப்பத்தை ஹாதியா தெரிவித்த போதும் அதை அனுமதிக்காத நீதிமன்றம் ஹாதியாவை அவரது வீட்டுச் சிறையில் இருந்து மீட்டு அவர் முன்னர் கல்வி பயின்ற சிவராஜ் ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்தது. அங்கு அவர் அவரது கல்வியை தொடரலாம் என்று அறிவித்தது. மேலும் கல்லூரி தலைவர் ஹாதியாவின் பொறுப்பாளராக இருப்பார் என்றும் அனைத்து மாணவிகளைப் போல ஹாதியாவும் அங்கு நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரின் பாதுகாப்பை தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறிய நீதிமன்றம் இது தொடர்பான அட்டுத்த கட்ட விசாரணை வருகிற ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

இவ்வளவு துன்பத்தினை எதிர்கொண்ட பிறகும் இத்துனை பெரிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் தற்போது ஹாதியாவிற்கு கிடைத்திருப்பது அவர் விரும்பிய உண்மையான சுதந்திரமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆயினும் தனது உரிமைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் அனைத்து அடக்குமுறைகளையும் தைரியமாக ஏதிர்கொண்ட ஹாதியாவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.