ஹாஷிம்புரா கூட்டுப்படுகொலை: 16 முன்னாள் காவலர்களுக்கு ஆயுள் சிறை!

0

ஹாஷிம்புரா கூட்டுப்படுகொலை: 16 முன்னாள் காவலர்களுக்கு ஆயுள் சிறை!

உத்தரபிரதேச மாநிலம் ஹாஷிம்புராவில் 42 முஸ்லிம் இளைஞர்களை உத்தரபிரதேச மாநில சிறப்பு ஆயுதப்படையினர் (Provincial Armed Constabulary – பி.ஏ.சி.) கூட்டுப்படுகொலை செய்த வழக்கில் 16 முன்னாள் காவலர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நீதிபதிகள் எஸ். ஸ்ரீதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.

உ.பி. மாநில ஆயுதப்படையின் (பி.ஏ.சி) 41-வது பட்டாலியனைச் சேர்ந்த அதிகாரிகளான சுரேஷ் சந்த் சர்மா, நிரஞ்சன் லால், கமல் சிங், புத்தி சிங், பசந்த் பல்லப், குன்வார் பால் சிங், புத்த சிங், ரன்பீர் சிங், லீலா தர், ஹம்பீர் சிங், சொக்கம் சிங், கமி ஹுலாஹா, சரவண் குமார், ஜெய்பால் சிங், மகேஷ் பிரசாத், ராம் தயான் ஆகியோர் 31 ஆண்டுகளுக்கு பிறகு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

1987 ஆம் வருடம், மே மாதம் 22 இரவில், டெல்லியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மீரட் நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்திலும் இருக்கும் ஹாஷிம்புரா என்ற இடத்தில் நாட்டின் மிகப்பெரிய கஸ்டடி கொலைகள் அரங்கேறியது. மீரட்டில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நிகழும்போது பள்ளிவாசல், வீடுகளில் நுழைந்து 600க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை பலம் பிரயோகித்து கஸ்டடியில் எடுத்ததோடு அதில் ஏறத்தாள 50 இளைஞர்களை ட்ரக்கில் ஏற்றி மகன்பூர் கிராமத்திற்கு கொண்டு சென்ற பி.ஏ.சி. படையினர் அவர்களை ஒவ்வொருத்தராக சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்களை அருகில் உள்ள ஹிண்டன் கால்வாயில் தூக்கியெறிந்தனர். இதில் 38 அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடிய சம்பத்தில் இருந்து தப்பிய ஐந்து நபர்கள் தெரிவித்த செய்திகள்தான் இரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்தன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.