ஹிஜாப் அணிந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் அமெரிக்கப் பெண்:இப்திஹாஜ் முஹம்மத்

0

ஹிஜாப் பெண்களை முடக்குகிறது என்ற கோஷங்களை தனது கத்திச் சண்டையால் கிழித்தெறிந்துள்ளார் இப்திஹாஜ் முஹம்மது. அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணான இவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் கத்திச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

2008 பீஜிங் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான கத்திச் சண்டை போட்டியில் அமெரிக்கா பதக்கம் வென்றுள்ளது.

தனது வெற்றி குறித்து இப்த்ஹாஜ் கருத்து தெரிவிக்கையில், “இன்று மக்களில் பலர் முஸ்லிம் பெண்கள் குரலற்றவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டும் முஸ்லிம் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் நினைத்துக் கொண்டுள்ளனர். இத்தகைய எண்ணங்களை நான் அகற்ற விரும்பினேன்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.