ஹூப்ளி வழக்கு:குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!

0

ஹூப்ளி சதித் திட்டம் தீட்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரையும் ஹூப்ளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.இவ்வழக்கின் விசாரணை ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.குண்டுவெடிப்பை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியதாக கர்நாடகா காவல்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் ஏழு ஆண்டுகளாக ஜாமீன் கூட மறுக்கப்பட்டு சிறையில் வாழ்வை கழித்து வந்தனர்.கர்நாடகா காவல்துறையின் முஸ்லிம் வேட்டையின் ஒரு பகுதியாக புனையப்பட்டதுதான் இவ்வழக்கு என்று குற்றம்சாட்டி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கேரளாவைச் சார்ந்த ஷிபிலி, ஷிபிலியின் சகோதரர் ஷாதுலி, யஹ்யா, முஹம்மது அன்ஸார் நத்வி உள்ளிட்டோர் 7 ஆண்டுகளாக கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள சிறைகளில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர்.யு.ஏ.பி.ஏ சட்டப்படி இவர்கள் கைது செய்யப்பட்டதால் இதுவரை ஜாமீன் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் நீதிமன்றம் ஆதாரம் ஏதுமில்லாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளது

Comments are closed.