ஹைதராபாத், அஹமதாபாத் மற்றும் ஔரங்காபாத் நகர்களின் பெயரை மாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்

0

ஹைதராபாத், அஹமதாபாத் மற்றும் ஔரங்காபாத் நகர்களின் பெயரை பாக்யாநகர், கர்ணாவதி மற்றும் சாம்பாஜி நகர் என மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ள ஆர்.எஸ்.எஸ். இன் செயளர் ஒருவர் கூறுகையில், “நாம் நமது பழமையான வரலாற்று பெயர்களை நகரங்களுக்கு வைக்க வேண்டும்” என்றும் “படையெடுத்து வந்தவர்களின் பெயர்களை வைக்க கூடாது” என்றும் கூறியுள்ளார். ஒரு சுதந்திர நாடாக நாம் நம் கலாச்சாரத்தில் பெருமைகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஹைதராபாத்திற்கு இந்துக் கடவுளான பாக்யலக்ஷ்மியின் பெயரையும் அகமதாபாத்திற்கு இந்து மன்னர் கரன் தேவ் 1 இன் பெயரையும், ஔரங்காபாத்திற்கு சத்ரபதி சாம்பாஜியின் பெயரையும் வைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் பள்ளி பாட புத்தகங்களில் வரலாற்றை திரிப்பதில் இருந்து நகர்களின் பெயரை மாற்றுவது என வரலாற்று சுவடுகள் பெருவாரியாக சிதைக்கப்பட்டு வருகிறது. சென்ற மாதம் பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்தின் குர்கோன் மாவட்டத்தின் பெயரை குருகிராம் என்று மாற்றியது பா.ஜ.க அரசு.

 

Comments are closed.