ஹைதராபாத் பல்கலைகழகத்தில் கஷ்மீரை சேர்ந்தவர் என்று நினைத்து தாக்கப்பட்ட சீக்கிய மாணவர்

0

ஹைதராபாத் பல்கலைகழகத்தில் 25 வயதான அன்மோல் சிங் எனும் சீக்கிய மாணவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்ததவர்களால் தாக்கப்பட்டுள்ளார். இவரை தாக்கியவர்கள் சிங் ஒரு கஷ்மீரி என்று நினைத்து தாக்கியுள்ளனர்.

இவர் கஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் அராஜாகப் போக்கை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டு தனது விடுதிக்கு திரும்பும் வழியில் சுமார் 25 ஏ.பி.வி.பி. அமைப்பினரால் சூழப்பட்டு தாக்கப்பட்டார்.

தான் தாக்கப்பட்டது குறித்து அன்மோல் சிங் கூறுகையில், தான் முகத்திலும் வயிற்றிலும் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றும் தங்களை துரத்தி வந்து அந்த கும்பல் தாக்கியது என்றும் அவர் கூறியுள்ளார். தனது தாடி மற்றும் தனது நிறத்தினால் தன்னை கஷ்மீரி என்று நினைத்து ஏ.பி.வி.பி. கும்பல் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீதான தாக்குதல் அத்தோடு நிறுத்தப்படவில்லை என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் மற்றொரு ஏ.பி.வி.பி. கும்பல் அவரை மருத்துவமனையில் வைத்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கிருந்த மாணவர்கள் சிலரின் தலையீட்டின் பேரில் அந்த கும்பல் அங்கிருந்து களைந்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் சிங் தாக்கப்படும் போது பாகாப்பு அதிகாரிகள் அந்த தாக்குதலை தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் ஏ.பி.வி.பி. கும்பலில் ஒருவன் பிலால் என்று கத்திக்கொண்டு வந்ததாகவும் ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.

பிலால் என்பவர் கஷ்மீரை சேர்ந்த ஆய்வு மாணவர், இவர் தனது படிப்பை முடித்துவிட்டு சில மாதங்களுக்கு முன்னர் தான் கஷ்மீர் சென்றுள்ளார்.

இது குறித்து சிங்கை தாக்கிய ஏ.பி.வி.பி. அமைப்பின் தலைவரிடம் கருத்து கேட்கையில், தாங்கள் சிங்கை தாக்கவில்லை என்றும் மாறாக சிங்கும் அவரது நண்பர்களும் தான் தங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

Comments are closed.