ஹைதராபாத் பல்கலைகழகம் கொடுத்த நிதியுதவியை நிராகரித்தது ரோஹித் வெமுலா குடும்பம்

0

ஹைதராபாத் பல்கலைகழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ரோதித் வெமுலாவின் குடும்பத்திற்கு ஹைதராபாத் பல்கலைகழக சார்பில் 8 லட்ச ரூபாய் நிதியுதவி செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த ரோஹித் வெமுலாவின் குடும்பம் மோடியும் ஸ்மிர்த்தி இராணியும் ரோஹித் மரணம் குறித்து பேச ஏன் 5 நாட்கள் ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ரோஹித்தின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும் என்று ரோஹித்தின் தாய், சகோதரன் மற்றும் சகோதரி தெரிவித்துள்ளனர்.

“8 லட்சமல்ல, ரோஹித் மரணித்த ஹைதராபாத் பல்கலைகழகத்தில் இருந்து 8 கோடி கொடுத்தாலும் அதை பெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை” என்று ரோஹித்தின் சகோதரி நீலிமா தெரிவித்துள்ளார். “ஸ்மிர்த்தி இராணி எங்கள் குடும்பத்திடம் பேச ஐந்து நாட்கள் ஆனது, ஏன் அவருக்கு ஐந்து நாட்கள் ஆனது, அவர் பெண் இல்லையா, அவரும் ஒரு தாய் இல்லையா” என்றும் ரோஹித்தின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் “ரோஹித் மரணித்தர்கான காரணம் எங்களுக்கு தெரிய வேண்டும்” என்றும் “நீங்கள் அவனை கொன்றுவிட்டீர்களா இல்லை அவன் தற்கொலை செய்து கொண்டானா? என்று தெரிய வேண்டும்” என்றும் “எதற்காக ரோஹித் இடை நீக்கம் செய்யப்பட்டான்? இதற்க்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் நீலிமா கூறியுள்ளார்.
இது குறித்து ரோஹித்தின் சாகோதரி நீலிமா மேலும் கூறுகையில், “ரோஹித் பயந்த சுபாவம் உடையவன் இல்லை, அவன் மரணத்தின் பின்னால் உள்ள காரணிகளை கண்டுபிடிக்க வேண்டும்” என்றும் “ரோஹித் தற்கொலை செய்ய வைக்கப்பட்டுள்ளான், இது ஒரு கொலை” என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஏ.பி.வி.பி. தலைவன் சுஷில் குமாரும் ஹைதராபாத் பல்கலைகழக துணை வேந்தர் அப்பாராவும் தான் இதற்கு முழு முதல் காரணம் என்று நீலிமா குற்றம் சாட்டியுள்ளார்.

Comments are closed.