மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா சிங்கிற்கு பிணை மறுப்பு

0

2008 மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா சிங்-ஐ பிணையில் விடுவிக்க மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி என்று மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவரை தேசிய புலனாய்வுத்துறை குற்றமற்றவர் என்று சமீபத்தில் கூறியிருந்தது.

இவர் பிணை மீதான் இந்தத் தீர்ப்பு மாலேகான் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பிரக்யா சிங்கின் பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரக்யா சிங்கிற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படை சமர்பித்திருந்த போதிலும் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி பிரக்யா சிங் மற்றும் மேலும் ஐவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாங்கள் கைவிடுவதாக தேசிய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் கூறியிருந்தது. மேலும் இவர்கள் மீது போடப்பட்ட கடுமையான MCOCA சட்டத்தினையும் திரும்பப் பெற கோரியிருந்தது.

இதனை அடுத்து மே மாதம் 30 ஆம் தேதி தன் மீது தேசிய புலனாய்வுத்துறை எந்த வித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை என்று கூறி பிரக்யா சிங் பிணையில் வெளிவர விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் உறுதியாக இருப்பதாகவும் அதனை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்படி நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வைத்தனர்.

2014 பா.ஜ.க தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்கில் சற்று மென்மைப் போக்கு காட்டுமாறு தன்னிடம் NIA அதிகாரி கேட்டுக்கொண்டதாக வழக்கறிஞர் ரோகினி சாலியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.