11 ஃபலஸ்தீன வீடுகளை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்

0

கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிகப்படியான ஃபலஸ்தீன வீடுகளை இஸ்ரேல் இடித்துள்ளதாக முன்னணி இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஜெருசலேம் அருகில் உள்ள கலந்தியா பகுதியில் இஸ்ரேலிய புல்டோசர்கள் 11 ஃபாலஸ்தீன வீடுகளை இடித்து தரைமட்டமாக்கின. ஒரு இரண்டு மாடி கட்டிடமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இஸ்ரேலின் இந்த அராஜக செயல் மூலம் 44 பேர் தங்கள் வீடுகளை இழந்து தெருவிற்கு வந்துள்ளனர். இதில் 11 குழந்தைகளும் அடக்கம்.

செவ்வாய் கிழமை காலை இந்த இடிப்பு நடைபெற்றுள்ளது. தங்கள் வீட்டை ஏன் இடிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டவர்களுக்கு எந்த வித காரணமோ பதிலோ இஸ்ரேலிய அதிகாரிகளால் கூறப்படவில்லை. முன்னதாக இந்த வருடம் மட்டும் 78 வீடுகள் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. சென்ற வருடம் மொத்தமாக 74 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

கலந்தியா பகுதியில் ஃபலஸ்தீன வீடுகள் இடிக்கப்பட்ட போது மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இதில் பல ஃபலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். இது குறித்து முஹம்மத் அல்-ஜோரி என்பவர் கூறுகையில், தங்கள் வீட்டை இடிக்கப் போவதாக திங்கள் கிழமை மதியம் இஸ்ரேலிய அதிகாரி கூறிவிட்டுச் சென்றனர் என்றும் அதில் பல வீடுகள் இன்னும் முழுவதுமாக கட்டி முடிக்கப்படவே இல்லை என்றும் கூறியுள்ளார். மற்றொருவரான ஷால்பேக் கூறுகையில், தனது சகோதரர் தன் வீட்டிற்காக தன் அத்துணை உழைப்பையும் சேமிப்பையும் அர்பணித்திருந்தார். தற்போது எங்கு செல்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் சட்ட விரோதமாக கட்டபப்ட்டவை என்று இஸ்ரேலிய தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் 60% இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் ஃபாலஸ்தீனர்கள் வீடு கட்ட அனுமதி கிடைப்பது என்பது நடக்காத காரியம்.

Comments are closed.