12 வயது ஃபலஸ்தீன சிறுமியை சிறையில் இருந்து விடுதலை செய்தது இஸ்ரேல்

0

டிமா அல்-வாவி என்கிற 12 வயது பாலஸ்தீன சிறுமி இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலியரை கத்தி வைத்து குத்த முயன்றதாக குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாவி மேற்குக் கரையில் உள்ள துல்கறேன் பகுதியில் வைத்து பாலஸ்தீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கிருந்து ஹெப்ரோன் அருகே உள்ள தனது வீட்டிற்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி தனது பள்ளி சீருடையில் இருந்த போதே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்க்குக் கரையில் உள்ள யூத குடியிருப்பின் வாசலில் வைத்து அவள் கைது செய்யப்பட்டால். அப்பொழுது அவளிடம் கத்தி ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபரில் இருந்து இதுவரை ஏறத்தாள 201 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டிருகின்றனர். அதில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்களை தாக்க முயன்றனர் என்று கூறி கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய நீதிமன்றத்தில் வாவிக்கு நான்கு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. வாவியின் வழக்கறிஞர் தாரிக் பார்கௌத் கூறுகையில் இதுவரையிலான இஸ்ரேலிய கைதிகளில் வாவி தான் சிறிய வயது பெண் கைதி என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் தற்பொழுது 450 ஃபலஸ்தீன சிறுவர்களை கைதிகளாக வைத்துள்ளது. அதில் 100 க்கும் மேற்பட்டோர் 16 வயதிற்கு கீழானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.