13.5 லட்சம் பணத்தை நெருக்கமானவர்களுக்கு அனுப்பிய ஸ்வச் பாரத் அதிகாரிகள் கைது

0

தூய்மை இந்தியா திட்டம் என்கிற பெயரில் மோடி அரசு மக்கள் மீது புதிய வரியை சுமத்தியது. தற்பொழுதுஇந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் சுமார் 13.5 லட்சம் ரூபாயை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக அனுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடுதல் துணை கமிஷனர் வி.பி.சிங் அலுவலகத்தில் பணியாற்றும் பிரவீன் குமார் மற்றும் பிரவேஷ் ஷர்மா, ஆகிய இரண்டு அதிகாரிகள் இந்த முறைகேடு தொடர்பாக கடந்த செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.