15 வயது ஈராக்கி சிறுவனை நீரில் மூழ்கடித்த பிரிட்டிஷ் ராணுவத்தினர்

0

2003 ஆம் ஆண்டு ஈராக்கின் மீதான படையெடுப்பின் போது 15 வயது சிறுவன் ஒருவனை பிரிட்டிஷ் ராணுவத்தினர் நீரில் மூழ்க விட்டது குறித்த விசாரணை முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து பிரிட்டனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மிகுந்த வருத்தத்தினை தான் தெரிவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

அஹ்மத் ஜப்பார் கரீம் அலி என்கிற 15 வயது சிறுவனை பஸ்ரா நகரில் வைத்து கொள்ளையடித்தான் என்று கூறி இன்னும் மூன்று பேருடன் சேர்த்து கைது செய்தது பிரிட்டிஷ் ராணுவம். பின்னர் அஹமதை கழிவு நீர் கால்வாயில் பிரிட்டிஷ் ராணுவத்தினர் இறக்கிவிட்டுள்ளனர்.

பெரும்பால ஈராக்கியர்களை போல நீச்சல் தெரியாத அஹமத் அந்த நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பிரிட்டிஷ் ராணுவத்தினர் அஹமதை கைது செய்ததே தவறு என்றும் பின்னர் அவரை தங்கள் வாகனத்தில் சட்ட விற்றோதமாக அடைத்து வைத்தது, கால்வாயில் இறக்கி விட்டது என்று எதுவும் நடந்திருக்க கூடாத துரதிரிஷ்டவசமான சம்பவங்கள் என்று விசாரணை முடிவுகள் கூறியுள்ளன.

அஹமதின் மரணத்திற்கு தொடர்புடைய இராணுவ வீரர்கள் பிரிட்டிஷ் முன்னதாக 2006 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர்.

தற்போது பிரிட்டனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஹமதின் மரணத்திற்கு மன்னிப்புக் கேட்டுள்ளது மிகவும் காலதாமதமான செயல் என்றாலும் தங்களது தவறை உணர்ந்துகொண்டு பொறுப்பேர்ப்பதில் இது ஒரு பெரும் முன்னேற்றமாகும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments are closed.