150 துப்பாக்கிகள், 100 வெடிகுண்டுகள், 3000 தோட்டாக்கள். இந்துத்வா தீவிரவாதியின் ஷாப்பிங் லிஸ்ட்

0

150 துப்பாக்கிகள், 100 வெடிகுண்டுகள், 3000 தோட்டாக்கள். இந்துத்வா தீவிரவாதியின் ஷாப்பிங் லிஸ்ட்

மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த இந்துத்வ தீவிரவாதிகள் மூன்று பேரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படை கைது செய்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வருகின்ற 6 இல் இருந்து 8 மாத காலத்தில் பயன்படுத்துவதற்காக 150 துப்பாக்கிகள், 100 வெடிகுண்டுகள் மற்றும் 3000 தோட்டாக்களை அவர்கள் தயார் செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவரான வைபவ் ரவுத் கடந்த 2014 ஆம் ஆண்டு ஹிந்து கோவன்ஷ் ரக்ஷா சமிதி அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர். இந்த அமைப்பு பல தீவிர இந்துத்வா அமைப்புகளான ஹிந்து ஜஞ்சாகுருதி சமிதி, ஷிவ் பிரதிஸ்தன் மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடைய அமைப்பாகும்.

ரவுத் இடம் தீவிரவாத தடுப்புப் படை நடத்திய விசாரணையில் அவர் ஒரு சிறிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலையே நடத்தி வந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். இன்னும் இத்துடன் உத்தர பிரேதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள சிலர் உடனான தொடர்பு குறித்தும் தீவிரவாத தடுப்புப் படை விசாரித்து வருகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலும் பல தோட்டாக்கள் மற்றும் நாட்டு துப்பாக்கிகள் செய்வதற்கான எந்திரங்கள் வாங்கும் பணிகளையும் செய்து வந்தனர் என்றும் இவர்கள் இதற்கான பயிற்ச்சியை உத்திர பிரதேசம், பீகார் போன்ற இடங்களில் பெற்றுள்ளனர் என்று தீவிரவாத தடுப்புப்படை (ATS) தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களை அஸ்ஸாமில் இருந்து இவர்கள் பெற்றுள்ளனர் என்றும் ATS தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பகுதி தயாரிக்கப்பட்ட 5 கைத்துப்பாக்கிகள் முப்பது தோட்டாக்கள், 7.65mm துப்பாக்கிகள் , 5 நாட்டுத் துப்பாக்கிகள், 11 கைத் துப்பாக்கிகள், 20 வெடிகுண்டுகள், சுமார் ஐம்பது வெடி குண்டுகளை தயார் செய்யும் அளவிற்கான வெடிபொருட்கள், 22 ,மின்னணு அல்லாத டெடொனேட்டர்கள், ஒன்றரை கிலோ வெடிப்பொருட்கள், ஜெலட்டின் குச்சிகள், இரண்டு பாட்டில் விஷம், பத்திற்கும் மேற்ப்பட்ட இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் போலி பதிவு எண் பலகைகள், வரைபடங்கள், சொற்பொழிவுகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது.

வைபவ் ரவுத் குறித்து அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில், ரவுத் பசு பாதுகாவல் என்கிற பெயரில் அப்பகுதி இறைச்சி விற்பனையாளர்களிடமிருந்து பலவந்தமாக பணம் பிடுங்கி வந்தவர் என்றும் இந்த பணத்தின் மூலமாகத்தான் இந்த சட்டவிரோத ஆயுத உற்பத்தி தொழிச்சாலையை அவர் நடத்தி வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஹிந்து ஜஞ்சாகிரண் சமிதி என்ற அமைப்புடன் தொடர்புடைய முக்கிய பசு பாதுகாவல் குண்டர்களில் வைபவ் ரவுத்தும் ஒருவர். கைது செய்யப்பட்டவர்களில் மற்றொருவரான கொந்தலேகர் ஸ்ரீ ஷிவபிரதிஷ்தன் அமைப்புடன் தொடர்புடையவர். இந்த அமைப்பின் தலைவர் 85 வயது சம்பாஜி பிதே என்பவராவார். இவரை மோடி தனது குரு என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தீவிரவாதிகளுடன் தொடர்புடைய மேலும் பலரிடம் ATS விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து உத்திர பிரதேசம் மற்றும் அஸ்ஸாமைக் குறிக்கும் அனைத்து மெயில்களும் ஆராயப்படும் என்றும் ATS தெரிவித்துள்ளது.

Comments are closed.