17 வயது ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை: 10 ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது

1

கேரளா மாநிலம் சேர்த்தலா பகுதியில் 17 வயது அனந்து என்ற முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தொண்டரின் கொலை வழக்கில் 10 ஆர்எஸ்எஸ் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வயலார் ராம வர்மா உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று வந்த அனந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகாவில் முன்னர் அடிக்கடி கலந்துகொண்டுள்ளார். பின்னர் ஏதோ காரணங்களுக்காக சாகாக்களை அவர் புறக்கணித்துள்ளார். இதனையடுத்து இப்போது இந்த கொலை நடந்ததையடுத்து இவர் சாகாக்களை புறக்கணித்ததால் இந்த கொலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, அனந்து பயின்று வந்த வயலார் ராம வர்மா பள்ளியில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இதனை காவல்துறை தலையிட்டு சரி செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் வைத்து ஒரு கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்துனை நடந்தும் கூட இந்த பிரிவினருக்கு இடையே அன்று மாலையே நீளிமன்கலம் கோவில் திருவிழாவின் போது மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த திருவிழாவில் கலந்துகொள்ள வந்த அனந்துவை ஒரு கும்பல் துரத்திச் சென்றுள்ளது. அவர் அந்த கும்பலால் கடுமையாத தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அனந்துவிற்கு தலையிலும் வயிற்றிலும் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதில் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய பத்து பேர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது

கடந்த இரண்டு மாதங்களில் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்பினர் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் பாஜக அமைப்பினர் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும் .

Discussion1 Comment

  1. பல்வேறு தீவிரவாத கொலை குற்றசாட்டுடைய RSS BJP மீது தேச பாதுகாப்பு சட்டம் பாயுமா? இல்லை அப்பாவிகளுக்கு மட்டும் தான் சட்டமா?