18 மாத ஃபலஸ்தீன குழந்தையை உயிருடன் எரித்துக் கொன்றவன் விடுதலை

0

ஃபலஸ்தீனின் மேற்குக் கரையில் 18 மாத குழந்தை உட்பட அதன் பெற்றோர்களையும் உயிருடன் எரித்துக் கொன்றவனை இஸ்ரேல் 10 மாத சிறையில் வைத்து விடுதலை செய்துள்ளது.

இஸ்ரேலின் வலது சாரி அமைப்பை சேர்ந்தவனான மீர் எட்டிங்கர் அவர் மீது எந்த குற்றமும் சுமத்தப்படாமல் கடந்த புதன் கிழமை விடுதலை செய்யப்பட்டான். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவன் செய்த கொலைகளுக்காக அவன் கைது செய்யப்பட்டிருந்தான். இவனது விடுதலை குறித்து இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு எந்த வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

விடுதலையான எட்டிங்கர் ஜெருசலேம் மற்றும் யத் பின்யாமின் நகரங்களுக்கு செல்வதை விட்டு ஆறு மாதங்கள் தடுக்கப்பட்டுள்ளான். மேலும் ஜுதியா மற்றும் சமாரியா ஆகிய பகுதிகளை விட்டு ஒரு வருடம் தடை செய்யப்பட்டுள்ளார். மேலும் இரவில் வெளியில் செல்வதை விட்டும் அவர் தடுக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவராக இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பால் கருதப்படும் எட்டிங்கர் அமெரிக்காவில் பிறந்த யூத ரப்பி மீர் கஹானே வின் பேரன் ஆவான். ஐவரும் பிரசித்தி பெற்ற யூத தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.