1806 வேலூர் புரட்சியும் முஸ்லிம்களும்

0

1806 வேலூர் புரட்சியும் முஸ்லிம்களும்

கி.பி. 18, -19ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பிரவேசம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் பொதுமக்கள் என்ற வகையில் முஸ்லிம்களுள் ஒரு பகுதியினர் எப்போதும் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாகவே இருந்து வந்துள்ளனர். 1857க்கு முன் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற பெரும்பாலான கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தியதில் முஸ்லிம் சிப்பாய்களுக்கு பெரும்பங்கு உண்டு. இத்தகைய செய்திகள் காலந்தோறும் இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்துள்ளன. இதில் 1806 வேலூர் புரட்சியும் அடங்கும். வேலூர் புரட்சியில் இந்திய இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர் என எழுதுவார்களே தவிர அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன என்பதைக் குறிப்பிடமாட்டார்கள். சென்னை ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆங்கிலேயரின் 1806- – 7ம் ஆண்டுக்கான ஆவணக் குறிப்புகளில் குறிப்பாக ஷிமீநீக்ஷீமீt ஷிuஸீபீக்ஷீவீமீs, றிuதீறீவீநீ சிஷீஸீsuறீtணீtவீஷீஸீs, யிuபீவீநீவீணீறீ சிஷீஸீsuறீtணீtவீஷீஸீs போன்ற ஆவணத் தொகுதிகள் 1806-ம் ஆண்டு வேலூர் கிளர்ச்சி குறித்த நிறைவான செய்திகளைத் தருகின்றன. ஆங்கிலேய நிர்வாகத்திற்கு எதிரான எண்ணப்போக்கு ஆங்கில இராணுவத்தில் பணிபுரிந்த இந்து, முஸ்லிம் சிப்பாய்கள் அனைவர் மனதிலும் நிலை கொண்டிருந்தது உண்மையே. ஆனால் 1806 கிளர்ச்சியை முன்னின்று நடத்தியவர்கள் முஸ்லிம் சிப்பாய்கள் தாம்.

1806 வேலூர் கிளர்ச்சிக்குப் பெயர் சூட்டுதல் குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடு உண்டு. அன்றைய ஆட்சியாளர்கள் இதனை ஒரு கிளர்ச்சி என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் சில வரலாற்று ஆசிரியர்கள் ‘இதுவே முதல் சுதந்திரப் போர்’ என்று எழுதியுள்ளனர் மற்றும் சிலர் ‘1857 சிப்பாய் கலகத்திற்கு முன்னோடி’ எனக் குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும் இக்கிளர்ச்சியானது ஆங்கில இந்தியப் படையினரால் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் புரட்சி என்பதும் இதில் முஸ்லிம்களின் பங்களிப்பு பிரதானமானது என்பதும் ஆவணங்கள் தெரிவிக்கும் உண்மையாகும்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.