2 ஆஸ்திரேலியர்கள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

0

இந்தோனேஷிய: போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக 2 ஆஸ்திரேலியர்கள் உட்பட 8 பேருக்கு இந்தோனேஷிய அரசு நேற்றிரவு மரண தண்டனை விதித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்தோனேஷிய அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாறன் உள்ளிட்ட 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று இந்தோனேஷிய அரசு தெரிவித்திருந்தது. எனினும், கடைசிநேரத்தில், குற்றவாளிகளில் ஒருவரான ஃபிலிப்பினா எனும் பெண்ணிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்தோனேசிய சட்டப்படி துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படும்.

Comments are closed.