+2  தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பாப்புலர்  ஃப்ரண்ட்  மாநில தலைவர் வாழ்த்து

0

image

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு  இன்று காலை 10.30மணியளவில் வெளியாகியது.  இவ்வருடம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  எழுதிய, தேர்வில் 1195மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதல் இடத்தை   கிருஷ்ணகிரி  மாவட்டம்  ஊத்தங்கரை யை  சேர்ந்த வித்யா மந்திர் பள்ளி  மாணவி ஆர்த்தி, அதே பள்ளியை  சேர்ந்த மாணவன் ஜஸ்வந்த்  ஆகியோர்  பெற்றுள்ளனர். மேலும்   வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும்  பாப்புலர்  ஃப்ரண்ட்   சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர்கள் வாழ்க்கையில் மேலும் பல சாதனைகள் படைத்து சமூக சேவைகளிலும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்  எனவும் வாழ்த்துகின்றேன்.

முதன்மையாளர்கள் என்ற பெருமிதங்கள் இடம்பிடிக்கும் அதே செய்தித்தாளில், வெற்றி வாய்ப்பைப் இழந்ததற்காக அரும்பும் முன்னரே வாழ்க்கையை முடித்துக்கொண்ட சில மாணவர்களையும் பார்க்க நேரும் அவலம் வருடாவருடம் தொடரவே செய்கிறது. சின்ன சின்ன இழப்புகளை கண்டு மனம் உடைந்து உயிரை மாயத்துகொல்வது என்பது இயற்கைக்கு முரணானது. தோல்விகள் தரும் பாடத்தை கொண்டு வரும் காலங்களில் சவால்களை சந்தித்து சாதனை புரிய வேண்டும் என மாணவர்களை கேட்டு கொள்கிறேன்.

         குழந்தை வளர்ப்பிலும் வியபாரத்தைப்போல் முதலீட்டை போட்டுவிட்டு லாபத்தை எதிர்பார்க்கும் போக்கை பெற்றோர்கள் கைவிட வேண்டும் என கேட்டுகொள்கிறேன். எதிர்கால தலைமுறையை சிறந்த முறையில் உருவாக்க மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஓரணியில் நின்று முயற்சிக்க வேண்டும்.  

 

இப்படிக்கு

 

M. முகம்மது இஸ்மாயில்

மாநில தலைவர்

பாப்புலர் ஃப்ராண்ட் ஆ ஃ ப் இந்தியா

தமிழ்நாடு 

Comments are closed.