200 க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்களில் ஆதார் தகவல்கள் கசிவு: UIDAI

0

200 க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு இணையதளங்கள் குடிமக்களின் பெயர், முகவரி, மற்றும் இன்ன பிற தகவல்களை வெளிப்படையாக வெளியிட்டுள்ளன என்று UIDAI தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிக்கு பதிலளிக்கையில் இந்த தகவலை UIDAI தெரிவித்துள்ளது. மேலும் தங்களுக்கு இது குறித்த தகவல் கிடைத்ததும் அந்த தளங்களில் இருந்து அவை நீக்கப்பட்டு விட்டது என்றும் UIDAI தெரிவித்துள்ளது.

இந்த தகவல் கசிவுகள் எப்போது ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் தராத UIDAI தங்களால் ஆதார் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் “210 மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகள் தொடர்புடைய இணைய தளங்களில் பலருடைய ஆதார் எண், பெயர், முகவரி உள்ளிட்ட பல தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்கும்படி பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.” என்று UIDAI தெரிவித்துள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதாரை பாஜக அரசு கட்டாயமாக்கி வருகிறது. சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும் ஆதார் இல்லாத மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் மாநில அரசு கூறியுள்ளது. இப்படியான சூழ்நிலைகளில் அரசு தரப்பில் இருந்தே இது போன்ற தகவல் கசிவு ஏற்படுவது ஆதார் தகவல்கள் எத்தகைய பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்பதை விளக்குகிறது.

Comments are closed.