2002 குஜராத் கலவர குற்றவாளி மாயா கோட்னானி யோகா நிகழ்ச்சியில் செல்பி

0

2002 ஆம் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் நரோடா பாட்டியா படுகொலைக்காக 28 வருடம் சிறைதண்டனை பெற்ற மாயா கோட்னானி யோகா நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்ற ஒருவருடன் செல்பி எடுத்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் கலவர வழக்கில் 2009 ஆம் ஆண்டு கோட்னானி குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்பொழுது மருத்துவ காரணங்களுக்காக பிணையில் வெளிவந்த அவர் இது போல நிகழ்சிகளில் பங்கெடுப்பதும் செல்பி எடுதுக்கொண்டிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது இந்த செல்பியை ஸ்ரேயா ராம்சந்த் லால்வாணி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ‘குஜராத்தின் முன்னால் கல்வி அமைச்சர் மாயா கோட்னானியுடன் தியானத்தில் ஈடுபட்டுள்ளேன்’ என்று அவர் கருத்து பதிந்திருக்கிறார். அவர் கோட்னானி அநியாயமாக செய்த படுகொலைகளை மறந்துவிட்டார் போலும்.

ஆனால் டிவிட்டர்வாசிகள் அதனை மறக்கவில்லை. அவரின் இந்த செல்பியை எதிர்த்து பலர் தங்கள் கோபங்களை வெளிக்காட்டியுள்ளனர்.

ஒருவர் அந்த செல்பி யை பதிவிட்டு “பிணையில் வந்த கொலைகாரி யோகா செய்து கொண்டிருக்கிறார்” என்று ட்வீட் செய்திருக்கிறார். மற்றொருவர் “கொலைகாரியுடன் செல்பி (#SelfieWithMurderer)” என்று பதிவு செய்துள்ளார்.

இன்னும் ஒருவர், “மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் சரிந்தது மட்டுமல்ல, கொலைகாரர்களும் ஊர் சுற்றிகொண்டிருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

வழக்கமாக பா.ஜ.க. வை சேர்ந்தவர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கும்போது, தான் அப்படி கூறவில்லை என்றோ அல்லது அது தான் இல்லை என்றோ கூறுவது வழக்கம். இதை கேலி செய்யும் வகையில் கோட்னானியின் செல்பியை பதிவிட்டு ” இது மாயா கோட்னானியே இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

எது எப்படி இருந்தாலும் மோடியின் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம்தான்.

Comments are closed.