2002 குஜராத் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 68 நபர்கள் விடுதலை

0

குஜராத் இனப்படுகொலைகளின் போது பனாஸ்கந்தா மாவட்டத்தின் செஷான் கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் இரண்டு குழந்தைகள் உட்பட 14 நபர்கள் கொலை செய்யப்பட்டனர். மார்ச் 2, 2002 அன்று இச்சம்பவம் நடைபெற்றது.ஏறத்தாழ 200 முஸ்லிம் குடும்பங்கள் இக்கிராமத்தில் வசித்து வந்தனர்.

வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த கிராமத்திற்குள் நுழைந்த 5000 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது.விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை 2002ல் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 12 துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த வழக்கில் 190 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர்.பிப்ரவரி 13 அன்று தீர்ப்பை வழங்கிய கூடுதல் செசன்ஸ் நீதிபதி வி.கே.புஜாரா சாட்சிகள் ஆதாரங்களை உறுதிப்படுத்தவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 68 நபர்களையும் விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

Comments are closed.