2002 கோத்ரா ரயில் எரிந்த வழக்கு: மூன்று பேர் விடுதலை, இருவருக்கு ஆயுள் தண்டனை

0

2002 கோத்ரா ரயில் எரிந்த வழக்கு: மூன்று பேர் விடுதலை, இருவருக்கு ஆயுள் தண்டனை

2002 குஜராத் கலவரத்திற்கு காரணமாக கூறப்பட்ட கோத்ரா ரயில் எரிந்த வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் மூன்று பேரை வழக்கில் இருந்து விடுவித்தும் சிறப்பு புலனாய்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 27 அன்று தீர்பளித்துள்ளது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஃபரூக் பாணா மற்றும் இம்ரான் சேறு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் ஹுசைன் சுலைமான் மோகன், காசம் பமேதி மற்றும் ஃபரூக் தந்தியா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் சிறப்பு நீதிபதி H.C.வோரா தீர்ப்பளித்தார்.

இந்த ஐந்து பேரும் கடந்த 2015-2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் மீதான விசாரணை சபர்மதி மத்திய சிறையில் வைத்து நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 8 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

57 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பலியான சபர்மதி விரைவு ரயில் வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி, குற்றமசாட்டப்பட்டவர்களில் 31 நபர்களை குற்றவாளிகள் என்று கூறி சிறப்பு புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த 31 நபர்களில் 11 நபர்களுக்கு மரண தண்டனையும் மற்ற 20 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. பின்னர் 2017 ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றம் இந்த 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது.

Comments are closed.