2008  மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: புரோஹித்திற்கு பிணை மறுப்பு

0

2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான கலோனல் புரோஹித்திற்கு பிணை வழங்க அளிக்கப்பட மனுவை கடந்த திங்கள் கிழமை தேசிய புலனாய்வுத்துறை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை சிறப்பு நீதிபதி எஸ்.டி. தெகாலே பிறப்பித்துள்ளார்.

தன் மீது MCOCA சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளை தேசிய புலனாய்வுத்துறை கைவிட்டுவிட்டது என்பதனால் தனக்கு பிணை வழங்கக்கோரி புரோஹித் விண்ணப்பித்திருந்தார்.

மேலும் தான் அந்த குண்டு வெடிப்பில் எவ்வகையிலும் சம்பந்தப்படவில்லை என்றும் விசாரணை இன்றி தான் சிறையில் 7  வருடங்களாக இருந்து வருகிறதாகவும் தனது விண்ணப்பத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புரோஹித்தின் பிணை மனுவை தேசிய புலனாய்வுத்துறை எதிர்த்துள்ளது. புரோஹித்தின் இந்த வாதங்கள் வழக்கு விசாரனயின் போது எடுத்துக்கொள்ள வேண்டுமே அல்லாமல் தற்போது ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்று அரசு தரப்பு கூறியுள்ளது. மேலும் அவருக்கு எதிராக பல ஆதாரங்கள் உள்ளதாகவும் அது கூறியிருந்தது.

2008  செப்டெம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக சாத்வி பிரக்யா சிங், புரோஹித் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Comments are closed.