2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: UAPA சட்டத்தை ரத்து செய்ய கோரிய புரோஹித் மனு குறித்து NIA விடம் உச்சநீதிமன்றம் கேள்வி

0

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித், தன் மீது UAPA சட்டத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனு அளித்திருந்தார். அவர் அளித்த மனு மீதான தங்களது கருத்தை மகாராஷ்டிரா அரசும் தேசிய புலனாய்வுத்துறையும் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்ற நீதிபதி R.K.அகர்வால் மற்றும் நீதிபதி A.M.சாப்ரீ அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

தன்னை இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் மற்றும் பாம்பே உயர் நீதிமன்றத்தில் புரோஹித் மனு அளித்திருந்தார். அவரது அந்த மனு மீதான முடிவை உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்திடம் விட்டது. ஆனால் புரோஹித்தை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து நீக்க முடியாது என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனையடுத்து புரோஹித்தை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்ற சிறப்பு நீதிமன்றம் மற்றும் பாம்பே உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவையும் தனது மனுவில் எதிர்த்திருந்தார்.

இதனையடுத்து அவரின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற பென்ச் இது தொடர்பாக பதிலளிக்க NIA மற்றும் மகாராஷ்டிர அரசிற்கு உத்தவிட்டுள்ளது.

Comments are closed.