2008 மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இருவருக்கு பிணை வழங்கிய NIA சிறப்பு நீதிமன்றம்

0

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி மாலேகானில் உள்ள நூராஜ் பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த வழக்கின்  வழக்கின் இரண்டு முக்கிய குற்றவாளிகளான சுதாகர் சதுர்வேதி மற்றும் சுதாகார் திவேதி என்கிற தயானந்த் பாண்டே ஆகியோர் NIA சிறப்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் தலா ஐந்து லட்ச ரூபாய் நிபந்தனை ஜாமீனுடன் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பிணை வழங்கியுள்ளது NIA சிறப்பு நீதிமன்றம். கர்னல் புரோஹிதிற்கு பிணை வழங்கப்பட்டதும் சதுர்வேதி மற்றும் தயானந்த் பாண்டே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கும் பிணை வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் விண்ணப்பித்தனர்.

முன்னதாக இவ்வழக்கில் மற்றுமொரு குற்றவாளியான சாத்வி பிரக்யா சிங் பாம்பே உயர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். முன்னதாக மகாராஷ்டிரா காவல்துரையும் தீவிரவாத தடுப்புப் பிரிவும் இணைந்து நடத்திய இந்த வழக்கின் விசாரணை பின்னர் 2011 ஏப்ரல் மாதம் தேசிய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பில் இதுவரை தற்போது தலைமறைவாகியுள்ள ராமச்சந்திர கல்சரங்கா மற்றும் சந்தீப் டாங்கே உட்பட 14 நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. இவர்கள் நாட்டில் நடைபெற்ற வேறு பல குண்டுவெடிப்பு வழக்கிலும் தேடப்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.