2009 கலகத்தில் ஈடுபட்ட 139 வீரர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது பங்களாதேஷ் உயர் நீதிமன்றம்.

0

பங்களாதேஷில் 2009 ஆம் ஆண்டு கலகத்தில் 57 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 139 வீரர்களின் மரணதண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 146  வீர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையும் இத்துடன்  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட 1000 பக்க தீர்ப்பை குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அட்டார்னி ஜெனெரல் மக்பூபே ஆலம், 139 பேருக்கு மரண தண்டன என்றும் 146 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து கூறிய அவர், “கலகக்காரர்கள் எந்த ஒரு இராணுவ அதிகாரியும் BDR இல் பணிபுரிய கூடாது என்ற நோக்கத்துடன் அப்பாவி அதிகாரிகளை இந்த கலகத்தின் மூலம் கொலை செய்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த தீர்ப்பு எதிர்பாராதது என்று பிரதிவாத தரப்பு வழக்கறிஞர் அமினுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். பொதுவாக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வழங்கப்பட்ட கீழ் நீதிமன்ற தீர்ப்பை இந்தத்தீர்ப்பு அப்படியே பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு நீதி கிடைக்க தனது கட்சிக்காரர்களை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தான் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு முன்னதாக டாக்கா நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 152 பேருக்கு மரண தண்டனையும், 158 வீரர்களுக்கு ஆயுள் தண்டனையும் வித்து தீர்பளித்த நான்கு வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், “BDR கலகத்திற்கு முன்னும் பின்னும் நடைபெற்ற கலந்தாலோசனைகள் மற்றும் விமர்சனங்களில் இருந்து இது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக பொருளாதார பாதுகாப்பை குலைக்கும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சூழ்ச்சி என்று தெரியவருகிறது. இந்த சதி மூலம் நன்கு பயிற்சி பெற்ற திறனுள்ள படையை அழிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

மேலும் கலகத்தை திட்டமிடுதல், அதிகாரிகளை சித்திரவதை செய்து கொலை செய்தல், அவர்களது உடமைகளை கொள்ளையடித்தல், அதிகாரிகளின் உறவினர்களை கலகத்தின் போது சிறைபிடித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் BDR வீரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் இந்த 57 இராணுவ அதிகாரிகளை தவிர்த்து தங்கள் படையில் உள்ள தங்களுக்கு எதிரான 8 வீரர்கள், 8 அப்பாவி பொதுமக்கள் மற்றும் வேறொரு படையை சேர்ந்த மற்றுமொரு வீர்கள் ஆகியோரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் மிகப்பரிய குற்ற வழக்கு என்று கூறப்படும் இந்த வழக்கில் சுமார் 800 வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுவரை பங்களாதேஷ் வரலாற்றில் இப்படி ஒரு வழக்கு  நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கலகத்தின் போது இராணுவ வீரர்கள் தங்களுக்கு பில்கனா தலைமையகத்தில் போதிய வசதிகள் கிடைப்பதில்லை என்று கூறி கலகத்தில் ஈடுபட்டனர். இது பின்னர் நாடு முழுவதிலும் உள்ள பிற இடங்களுக்கும் பரவியது. இராணுவ வீரர்கள் தங்களது தளபதிகளை சுட்டு கொலை செய்தும் அவர்களை சித்திரவதை செய்தும் கொன்றனர். மேலும் அவர்களது உடலை மறைத்தும் அவர்களது குடும்பத்தினரையும் சிறை பிடித்தனர். ஆயுத கிடங்குகளை தங்கள் வசப்படுத்திக்கொண்டு நடைபெற்ற இந்த கலகத்தில் பல இராணுவ உயர் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டார்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கலகம் தொடர்பாக 11 இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு 6011 வீரர்களுக்கு ஏழு வருட காலம் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Comments are closed.