2014ல் இருந்து பெரிய குண்டுவெடிப்புகள் நிகழவில்லை: மோடி கருத்துக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி!

0

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “ 2014-ல் இருந்து எந்த வெடிகுண்டு சத்தங்களும் இந்தியாவில் கேட்கவில்லை என்று பிரதமர் மோடி சொல்கிறார்.

புல்வாமா, பதான்கோட், உரி, கட்சிரோலி என 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. இதை மோடி காதுகளை திறந்து வைத்து கேட்க வேண்டும்” என்று ராகுல்காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் நேற்று மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 15 போலீஸ் கமாண்டோக்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராகுல்காந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெராவும் தேச பாதுகாப்பு தொடர்பாக மோடி தலைமையிலான பாஜக அரசு போலியான கதைகளை கூறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 1,086 மாவோயிஸ்டு தாக்குதல் நடந்துள்ளதாகவும், அவற்றில் 391 வீரர்களும், 582 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலுக்கு மோடி பொறுப்பேரா என்று கேள்வியெழுப்பிய அவர் சத்தீஸ்கரில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 1000 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் குற்றம்சாட்டினார்.

Comments are closed.