2014 – 2015 இல் 42% உயர்வடைந்த விவசாயிகள் தற்கொலை

0

கடந்த 2014 – 2015 காலகட்டத்தில் இந்திய விவசாயிகளின் தற்கொலை 42% அதிகரித்துள்ளதாக National Crime Records Bureau (NCRB) தெரிவித்துள்ளது. 2014 இல் மட்டும் 5650  விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த எண்ணிக்கை 2015 இல் 8007 ஆக உயர்ந்துள்ளது என்றும் NCRB தெரிவித்துள்ளது.

2014 – 2015 இல் நாட்டின் பல மாநிலங்கள் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டன. இதில் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்கள் தொடர்ச்சியாக இரண்டு வருட பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

கடும் பஞ்சத்தினால் ஏற்ப்பட்டுள்ள விவசாயிகள் தற்கொலையில் மொத்தம் 3030 தற்கொலைகளை கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இது மொத்த விழுக்காட்டில் 37.8% ஆகும். அடுத்தபடியாக 1358 தற்கொலைகளை கொண்டு தெலுங்கானா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 1197 விவசாயிகள் கர்நாடகா மாநிலத்தில் தற்கொலை செய்துள்ளனர். இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்திஷ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்கள் மட்டும் மொத்த விவசாயிகள் தற்கொலையில் 94.1% சதவிகிதத்தை கொண்டுள்ளது.

இதுவரை விவசாயிகள் தற்கொலை நடைபெறாத பகுதிகளில் கூட இந்த காலகட்டத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக NCRB தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை இல்லாத மாநிலம் பீகார், மேற்கு வங்கம், கோவா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு கஷ்மீர், ஜார்கண்ட், மிசோரம், நாகாலாந்து மற்றும் உத்திராகன்ட் ஆகிய பகுதிகளாகும்.

இந்த வறட்சிக்கு காரணம் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக முறையற்று பெய்யும் பருவமழை போதுமானதாக இல்லாதது என்று கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் விவசாயிகளின் தற்கொலையில் அதிகளவு உயர்வு இருந்தபோதும் விவசாயம் தொடர்பான கூலித் தொழிலாளிகளின் தற்கொலையில் 31.5% குறைவு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த 2014 இல் 6710 ஆக இருந்த விவசாய கூலித் தொழிலாளிகளின் தற்கொலை 2015 இல் 4595 ஆக குறைந்துள்ளது. இவர்களின் தற்கொலையிலும் மகாராஷ்டிராவே முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 1261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 709 தற்கொலைகளும் தமிழ்நாட்டில் 604 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. மொத்தமாக விவாசாய பகுதியில் நடந்துள்ள தற்கொலைகள் 2% உயர்வடைந்துள்ளது. 2014 இல் 12360 ஆக இருந்த தற்கொலை எண்ணிக்கை 2015 இல் 12602 ஆக உயர்ந்துள்ளது.

விவசாயிகளின் தற்கொலைக்கு மிகப்பெரும் காரணம் கடன் தொல்லை மற்றும் கடனை திருப்பி அடைக்க முடியாமை என்று கூறப்படுகிறது. சுமார் 8007  விவசாயிகள் இந்த காரணத்தினாலேயே தற்கொலை செய்துள்ளனர். விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் இந்த தற்கொலைக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 72.6% விவசாயிகள் சிறு மற்றும் நடுத்திர விவசாயிகள் என்றும் இவர்கள் இரண்டு ஹெட்டர் நிலத்துக்கும் குறைவாக கொண்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

பண பயிர்கள் எனப்படும் CASH CROPS பயிர் செய்யப்படும் மாநிலங்களில் தான் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகாமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயிர்களை பயிரிட அதிக முதல் தேவை. கூடுதலாக இதில் பயிர்கள் பொய்க்கும் அபாயமும் அதிகம் என்று விவசாய ஆர்வலர் விஜய் ஜவாந்தியா. பீகார் போன்ற மாநிலங்களில் மோசமான சீதோஷன நிலைகளின் போது விவசாயிகள் இடம்பெயர்வது பயிர்களை பொய்ப்பதில் இருந்து அவர்களை பாதுகாக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.