2016 இல் 41% இழப்பை சந்தித்த BSNL, SAIL மற்றும் ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனங்கள். தேசிய வளர்ச்சி?

1

கடந்த 2016 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களான BSNL, SAIL மற்றும் ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 41% இழப்பை சந்தித்துள்ளன. இந்த வருடத்தில் எப்போதும் இழப்பு கணக்கில் முன்னிலை வகிக்கும் BSNL ஐ பின்னுக்குத்தள்ளி SAIL முதலிடத்திற்கு வந்துள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கணக்கீட்டின் (Public Enterprises Survey) படி (Maharatna Steel Authority of India) SAIL  இன் வருமானம் 7064.61 கோடிகள் குறைந்துள்ளது. இதனை நாள் கணக்கில் அளவிட வேண்டுமென்றால் கடந்த 2016 நிதியாண்டில், நாள் ஒன்றிற்கு 19 கோடி இழப்பில் இந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

SAIL லின் இந்த இழப்பிற்கு மோசமான சந்தை நிலவரம் தான் காரணம் என்று கூறப்பட்டாலும் அதன் செயல்பாட்டு செலவு மற்றும் அதன் தொழிலாளர் தளம் ஆகியவை இந்த இழப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் தொழிலாளர் தளத்தையும் அதன் செயல்பாட்டு செலவுகளையும் கணக்கில் கொண்டால், டாட்டா ஸ்டீல் மற்றும் JSW நிறுவனங்களை ஒப்பிடும் போது இதன் உற்பத்தி மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

இந்த நஷ்ட வரிசையில் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான BHELL நிறுவனமும் உள்ளது. இந்நிறுவனம் நாள் ஒன்றிற்கு 12 கோடி ரூபாய்கள் இழப்பில் இயங்கி வந்துள்ளது. மொத்தமாக 4382.52 கோடிகள் இழப்பை இந்த நிறுவனம் சந்தித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு SAIL நிறுவனத்தை போலவே எதிர்மறை மதிப்பில் சென்றுள்ளது. இந்த நிறுவனங்களை தொடர்ந்து ONGC விதேஷ், ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் மற்றும் PEC ஆகிய நிறுவனங்களும் இழப்புகளை சந்தித்துள்ளன.

இந்த மொத்த இழப்புகளில் பெரும் பகுதியை SAIL, BSNL மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் மட்டும் மொத்த இழப்பு கணக்கில் 41% பெற்றுள்ளன.

இந்த கணக்கீட்டில் நஷ்ட கணக்குகளோடு சில லாப கணக்குகளும் தெரிய வந்துள்ளது. அதில் மொத்தம் 244 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இலாபம் 12.54% ஆக உயர்வடைந்து 1,15,7767 கோடிகளாக ஆகியது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கலால் வரி, சுங்க வரி, பெருநிறுவன வரி, வட்டி போன்றவைகள் மூலம் அரசு கருவூலத்திற்கு கிடைத்த இலாபம் 38.63% (2,78,075 கோடிகள்) ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இப்படியிருக்க பிற பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ஏன் இவ்வளவு அதிகரித்துள்ளது என்ற கேள்விக்கு கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் பாபுல் சுப்றியோ, பழைய மற்றும் வழக்கொழிந்து போன ஆலைகளும், எந்திரங்களும் தொழில்நுட்பங்களும் அதிகப்படியான மனிதவளமும், மோசமான சந்தை யுக்திகளும், கடுமையான போட்டி முதலிய காரணிகள் தான் இந்த இழப்பிற்கு பொதுவான காரணங்கள் என்று கூறியுள்ளார்.

Discussion1 Comment

  1. நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வேன் என்று கூரியவர்கள் காரணங்களை தேடி கூறுவது நகைப்பிற்குரியது.