2016 தொடக்கத்தில் இருந்து 103 ஃபலஸ்தீனியர்களை கொன்றுள்ளது இஸ்ரேல்

0

2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 103 ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேல் சுட்டுக் கொன்றுள்ளதாக குத்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த கொலைகளில் 103 ஆவது நபராக பதினாறு வயது நிரம்பிய இஸ்ஸா தரைரா என்றவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த எண்ணிக்கையின் படி ஜெருசலேம் இன்திஃபாதா வில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 248  ஆக உயர்ந்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் பகுதியில் தரைரா கொல்லப்பட்டுள்ளார். இவரது கொலையோடு ஹெப்ரோனில் இதுவரை 77 ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நான்கு மரணங்கள் தரைராவின் குடும்பத்திலே நிகழ்ந்துள்ளது.

மொத்தம் நிகழ்ந்துள்ள 248  கொலைகளில் ஒரு மூன்று வயது குழந்தையையும் சேர்த்து 59 பேர் 18 வயதிற்கும் கீழானவர்கள். இந்த குழந்தை 2015 அக்டோபர் மாதம் 11  ஆம் தேதி காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் பெத்தலஹெம் நகரில் நான்கு மாத குழந்தை கடந்த 2015 அக்டோபர் 30 ஆம் தேதி கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.