2016-17 க்கான உயர்கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

0

2016-17 ஆம் ஆண்டின் கல்வி உதவித் தொகை திட்டத்தினை அறிவித்துள்ளது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. கல்வியில் ஆர்வமுள்ள ஏழை எளிய மாணவர்கள் தங்களின் பொருளாதார நிலை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாத பட்சத்தில் அவர்களுக்கு உதவ இந்த உதவித் தொகையினை அறிவித்துள்ளது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

டிப்ளமோ, முதுகலை பட்டம் முதலிய ஒரு வருடத்திற்கு குறைவில்லாத கல்வியை கற்க விரும்புபவர்கள் இந்த ஊக்கத்தொகைக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம், சமூகப் பணி மற்றும் ஊடகத்துறையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்ச்சியாக ஆறாம் வருடம் வழங்கப்படும் இந்த கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் இந்த முகவரியில் பூர்த்தி செய்யக் கிடைக்கும். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் இங்கே சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை popularfrontscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக 31 ஆகஸ்ட் 2016 குறிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கல்வி உதவித் தொகைக்காக இது வரை 12 மாநிலங்களில் உள்ள 3053 மாணவர்களுக்கும் 1605 மாணவிகளுக்கும் மொத்தமாக 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஊக்கத்தொகை பெரும் மாணவர்கள் இதன் மூலம் கல்வி பயின்று ஒரு பொறுப்பான குடிமக்களாக சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பை வழங்குவார்கள் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

Comments are closed.