2017 இல் ஒரு வாரத்திற்கு ஒரு பசு தொடர்பான வன்முறை

0

2017 ஆண்டில் இதுவரை 30வது பசு தொடர்பான வன்முறை நிகழ்ந்துள்ளது என்றும் இதனை வாரக்கணக்கில் பிரித்தால் வாரம் ஒன்றிற்கு ஒரு பசு தொர்பான வன்முறை என்று இந்தியாஸ்பென்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

பீகாரில் மாட்டிறைச்சி உண்டனர் என்ற வதந்தியின் அடிப்படையில் ஏழு பேர் தாக்கப்பட்டனர். (பார்க்க செய்தி). இந்த தாக்குதலையும் சேர்த்து 2010 முதல் இதுவரை 75 பசு தொடர்பான வன்முறைகள் நடைபெற்றுள்ளது என்று இந்தியா ஸ்பென்ட் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

மொத்தம் நடைபெற்ற 75 தாக்குதல்களில் 97% அதாவது 75 இல் 73 தாக்குதல்கள் இந்திய பிரதமராக பாஜக வின் மோடி கடந்த 2014 இல் பதவியேற்றபின் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல்களில் 56% முஸ்லிம்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையான 75 இல் 42 ஆகும். மேலும் 86%  தாக்குதல்கள் கொலையில் முடிவுற்றுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் 40 நிகழ்வுகள் (53%) பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற பசு தொடர்பான தாக்குதல்கள் கூட பாஜக உடனான கூட்டணி ஆட்சி ஏற்பட்டவுடன் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு தகவல்களை இங்கே காணலாம்.

 

Comments are closed.