2017 இல் நாடு முழுவதும் மொத்தம் 822 மதக்கலவரத்தில் 111 பேர் பலி: மக்களவையில் அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு

0

2017  ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் நடைபெற்ற சுமார் 822 மதக்கலவரத்தில் 111  பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் 2384  பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மத்திய அரசு மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த கலவரங்களில் அதிகபட்சமாக 195  மதக்கலவரங்களை கொண்டு உத்திர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 44 பேர் கொலை செய்யப்பட்டு 542 பேர் காயமடைந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மொத்தம் 100 மத மோதல்கள் நடைபெற்றுள்ளது என்றும் இதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 229 பேர் காயமடைதுள்ளனர் என்றும் ராஜஸ்தானில் மொத்தம் நடைபெற்ற 91 கலவரங்களில் 12 பேர் கொலை செய்யப்பட்டு 175 பேர் காயமடைந்துள்ளனர்  என்று தெரிய வந்துள்ளது.

மேலும் பீகாரில் மொத்தம் 85 கலவரங்கள் நடைபெற்றுள்ளது என்றும் இதில் மூன்று பேர் கொல்லப்பட்டு 321 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மத்தய பிரதேசத்தில் மொத்தம் 60  கலவரங்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டு 191  பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 58 கலவரங்களும் குஜராத்தில் 50 கலவரங்களும் நடைபெற்றது என்றும் இவற்றில் தலா ஒன்பது மற்றும் எட்டு பேர் கொல்லப்பட்டு 230 மற்றும் 125 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மொத்தம் 703 கலவரங்களில் 86 பேர் கொல்லப்பட்டு 2321 பேர் காயமடைந்தனர் என்றும் இதுவே 2015 இல் 751  கலவரங்களில் 97 பேர் கொல்லப்பட்டு 2264 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Comments are closed.