2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கொலைகாரன் ஷம்புலால் ரீகர்

0

பெங்காலி கூலித் தொழிலாளியான முஹம்மத் அஃப்ரசுல் என்பவரை கொடூரமாகத் தாக்கி எரித்துக் கொலை செய்த ஷம்புலால் ரீகர் வருகிற 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட உத்திரபிரதேச நவநிர்மான் சேனா என்ற கட்சியின் தேசிய தலைவர் அமித் ஜானி, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆக்ரா பகுதிக்கான எங்களது வேட்பாளர் ஷம்புலால் ரீகர் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது இருக்கும் ஜோத்பூர் சிறையில் இருந்தே இத்தேர்தலில் போட்டியிடுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெங்காலில் இருந்து குடிபெயர்ந்து வந்து ராஜ்ஸமந்த் பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த முஹம்மத் அஃப்ரசுல் என்ற கூலித் தொழிலாளியை கொடுராமாக தாக்கி எரித்து கொலை செய்து அதனை வீடியோவும் பிடித்தவர் இந்த ஷம்புலால் ரீகர். (பார்ர்க செய்தி).

இந்த கொடூர கொலையை அடுத்து அப்பகுதி வாழ் இந்து மக்களிடையே ஷம்புலால் ரீகரின் புகழ் மேலோங்கியது. இந்நிலையில் தற்போது உத்திர பிரதேச நவநிர்மான் சேனா அமைப்பின் இந்த அறிவிப்பை ஷம்புலால் ரீகர் ஏற்றுக்கொண்டாரா என்ற கேள்விக்கு, “நான் ரீகரிடம் நீண்ட காலம் தொடர்பில் இருக்கின்றேன். மேலும் ரீகர் இந்த தேர்தலில் ஆக்ராவில் போட்டியிட சம்மதித்துவிட்டார் என்பதை கூற நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களது கட்சியின் வேட்பாளராக இந்துத்வா முகங்களே இருக்க வேண்டும், இதற்கு ஷம்புலால் ரீகரை விட பொருத்தமான நபர் வேறில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.” என்று ஜானி தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு கொடூர கொலையை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு படுத்தப்படுவது குறித்து ஜானியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “ஷம்புலால் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி தான். அவர் கொலை குற்றம் சாட்டப்பட்டவர், கொலைக் குற்றவாளி அல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவ அமைப்பின் தலைவர் கன்னையா குமாரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் இந்த அமித் ஜானி.

Comments are closed.