காஷ்மிரில் சட்ட விரோதமாக 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கைது!

0

சிறுவா் நல ஆா்வலா்கள் தகவல்

ஜம்மு காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு 144 சிறுவர்கள் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மிர் உயா்நீதிமன்றக் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மிரில் சிறுவர்கள் பலா் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களை உடனடியாக விடுக்கக் கோரியும் சிறுவா் நல ஆா்வலா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவைக் கடந்த மாதம் 20ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், சிறுவர்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, காஷ்மிர் உயா்நீதிமன்றத்தின் சிறாா் நீதிக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

பின்னர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடா்பாக, கீழமை நீதிமன்றங்கள், காவல் துறையினா் உள்ளிட்டோரிடமிருந்து தகவல் பெற முடிவெடுக்கப்பட்டது. மேலும் அதில், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் பொய்யானவை எனவும், சிறுவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை காவல் துறை உரிய வகையில் பின்பற்றி வருவதாகவும், சிறுவர்கள் யாரும் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் சிறாா்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.