புதிய விடியல் – 2020 செப்டம்பர் 16-30

0

RSS கும்பல் நடத்திய சில தாக்குதல்களும் சங்க குடும்ப சண்டைகளும்

ஜனவரி 22, 2020 கேரளா, கண்ணூரிலுள்ள பொன்னியம் நயனார் பகுதியில் சாலை மறியல் நடந்தது. அப்போது வெடிகுண்டு வீசிய கோவையை சேர்ந்த கே.பிரபேஷ் கைதானார். இது குறித்து காவல்துறை அதிகாரி நிஜீஷ் கூறுகையில், “வெடிகுண்டு வீசிய பிரபேஷ், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேந்தவர். குண்டு வீசப்பட்டதில் அப்போது பணியில் இருந்த இரண்டு போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்” என்று கூறினார்.

மார்ச் 10, 2020 கோவை, வேதம்பாள் நகர் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது மார்ச் 4ஆம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. காவல்துறையினர் அப்பகுதியில் … 

மேலும் படிக்க

டெல்லி காவல்துறை யாரை வேட்டையாடுகிறது?

டெல்லி இனப்படுகொலை வழக்கின் துணை குற்றப்பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பெயர்களை சேர்த்திருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. டெல்லி காவல்துறையின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. யெச்சூரியைத் தவிர, ஜே.என்.யூ பேராசிரியர் ஜெயந்தி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த், திரைப்பட தயாரிப்பாளர் ராகுல் ராய் மற்றும் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும்,இவர்கள் மீது

மேலும் படிக்க

அரசாங்கத்தை விமர்சிப்பது தேச துரோகமா?

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட சட்டங்களை தங்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்துவது ஆட்சியில் இருப்பவர்களின் வாடிக்கையாகிவிட்டது. அதிலும் குறிப்பாக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் எதிர் கருத்துடையவர்களை முடக்குவதற்கும் மிரட்டுவதற்கும் இத்தகைய சட்டங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

அரசியல் சாசனத்திற்கு முரணாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை சென்ற வருட இறுதியில் மத்திய அரசாங்கம் கொண்டு வந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. மதத்தின் அடிப்படையில் வெளிப்படையான…

மேலும் படிக்க

இளைஞர்களோடு சில அமர்வுகள்

தன்னலமற்ற மனிதர்கள் தேவை! நீங்கள் தயாரா?

விஞ்ஞானமும், மனித நாகரீகமும் வளர்ந்துவிட்டதாக மார்தட்டி பெருமை பீற்றிக் கொள்ளும் நிகழ்காலத்திலும் சுயநலன் மட்டும் மாறாத காட்சியாகவே இருக்கின்றது. நீங்கள் சிறுவயது முதல் கேட்கும் அறிவுரைகள் ‘உனக்கு எதற்கு வீண் வம்பு?’, ‘அடுத்தவன் எக்கேடு கெட்டா உனக்கென்ன, நீ உன் வேலையை மட்டும் பார்’ போன்ற ரகம் சார்ந்தவை. அது பசும்மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி போல் மனதின் ஆழத்தில் பதிந்து நம்மை பாடாய் படுத்துகிறது.

சுயநலம் என்பது தனிமனிதன் துவங்கி, வீடு, வீதி, மாநிலம், நாடு என்றும், எங்கும் பரந்து வியாபித்துள்ளது. நாடுகள் என்று வரும்போது என் நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்ற இறுக்கமும், மாநிலம் என்று வருகின்றபோது என் மாநிலம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணமும், வீடு… 

மேலும் படிக்க

புதிய மோடி! புதிய ராமன்!

சர்வாதிகாரிகள் பொதுவாக நெருக்கடிகளை விரும்புவார்கள் என்பது வரலாறு தரும் பாடம். அது மக்கள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அவர்களுக்கு உதவுகிறது. அதற்கு சமகாலத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

தாராள ஜனநாயகம் நெருக்கடியை சந்தித்தபோது அமெரிக்காவின் தோல்விக்கான அனைத்து பொறுப்பும் ஜனநாயகவாதிகளையே சாரும் என்ற பொய்யை டொனால்ட் ட்ரம்ப் பரப்புரை செய்தார். பொதுவாக ட்ரம்பிற்கு எதிராக அமளியில் ஈடுபடும் குடியரசு கட்சியினர் இந்த கருத்திற்காக ட்ரம்பை கைத்தட்டி

ஊக்குவித்தனர். ஃபாக்ஸ் நியூஸ் போன்ற தீவிர வலதுசாரி ஊடகங்கள் போலியான செய்திகள் மற்றும் தவறான விளக்கங்களின் அடிப்படையில் ட்ரம்பிற்கு ஆதரவை அளித்தன. போலியான செய்திகளுக்கு குறுகிய ஆயுளே உள்ளது. எனினும், அவை மக்களின்…

மேலும் படிக்க

  1. இயக்கத்தின் மீது இறுகும் பிடி

“ஓர் அழகான செய்தியை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உங்களுக்கெல்லாம் தெரியும், நாம் இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தித்தோம். சகோதரர் ரொனால்ட் ஸ்டோக்ஸை அநியாயமாக கொலை செய்த கயவர்களை, உன் வழியில் நீயே பழிவாங்கு இறைவா, என இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை

மேலும் படிக்க

திருமணத்தின் அளவுகோல்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

  1. அவளுடைய செல்வத்திற்காக
  2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  3. அவளுடைய அழகிற்காக
  4. அவளுடைய மார்க்கத்திற்காக…

மேலும் படிக்க

சமூக நீதி போராளி சுவாமி அக்னிவேஷ் மரணம்

காவி உடை அணிந்த சாமியார்கள் பல்வேறு குண்டுவெடிப்பு செயல்களில் ஈடுபட்ட போதும் இந்து சமூகத்தில் உள்ள பெரும்பான்மையினர் அதனை வெளிப்படையாக கண்டிக்க முன்வரவில்லை. இச்சூழலில் மதத்தை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பாசிச சங்பரிவார் கூட்டம்..

மேலும் படிக்க

Comments are closed.