22 முஸ்லிம் பெயர்களுக்கு சீனாவின் ஜின்சியாங்கில் தடை

0

ஜின்சியாங்: உய்கூர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீனாவின் ஜின்சியாங் மாகாணத்தில் உள்ள ஹோட்டன் பகுதியில் 22 முஸ்லிம் பெயர்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. தீவிரவாதத்தை வலுவிழக்கச் செய்வதற்கான நடவடிக்கை என்ற பெயரில் உள்ளூர் அரசு நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாம்.இதுதொடர்பான அறிவிப்பு ஹோட்டன் பகுதியில் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
பின் லேடன், சதாம் ஹுஸைன், அரஃபாத், முஜாஹித், முஜாஹிதுல்லாஹ், அஸதுல்லாஹ், அப்துல் அஸீஸ், ஸைஃபுல்லாஹ், குல்துல்லாஹ், ஸைஃபுதீன், திக்ருல்லாஹ், நஸ்ருல்லாஹ், ஷம்ஸுதீன், ஃபகீருத்தீன் ஆகிய 15 ஆண் பெயர்களுக்கும், அமானா, முஸ்லிமா, முஃஹ்லிஸா, முனீஸா, ஆயிஷா, கதீஜா, ஃபாத்திமா ஆகிய 7 பெண் பெயர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெயர்களுக்கு தடை விதித்திருப்பது மனித உரிமை மீறல் என்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உய்கூர் முஸ்லிம் அசோசியேஷன் துணைத் தலைவர் இல்ஷாத் ஹஸன் தெரிவித்தார். உய்கூர் முஸ்லிம்களின் பெயர்களில் 80 சதவீதம், குர்ஆனிலும், இஸ்லாமிய அடிப்படை நூல்களிலும் இடம்பெற்றுள்ள முஸ்லிம் பெயர்கள் என்று இல்ஷாத் ஹஸன் கூறினார்.

Comments are closed.