22 லட்ச வாகக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

0

22 லட்ச வாகக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: மன்னிப்பு கேட்ட தேர்தல் ஆணையம்

தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தல் வாக்குப்பதிவில் சுமார் 22 லட்சம் வாக்காளர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தினால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தேர்தல் ஆணையத்தின் தவறை ஒப்புக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போன வாக்காளர்களிடம் மணிப்புக் கோரியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இது மிகப்பெரிய தவறு. அந்த மக்களிடம் நான் நேரடியாக மணிப்புக் கோருகிறேன். எனக்கு தெரிந்த பலர் தங்களால் வாக்களிக்க இயலவில்லை என்று நேரடியாக என்னிடம் கூறினர். இது அப்பட்டமான தவறு.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, பெயர் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் கடந்த 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கால்காட்டத்தில் நீக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து சுமார் 30 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. தற்போது இந்த 22 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் எந்த காரணத்திற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை. நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.