251 ரூபாய் ஃபிரீடம் அலைபேசி முன் பதிவு செய்தவர்களின் பணத்தை திருப்பிக் கொடுத்தது

0

420 இன் புதிய பெயர் 251 என்று எண்ணும்  அளவிற்கு கவர்சிகரமான விலையில் அலைபேசியை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் வெளியிட இருப்பதாக ரிங்கின் பெல்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. வெறும் 251 ரூபாய்க்கு அலைபேசி கிடைக்கிறது என்று எண்ணி இந்திய மக்கள் பலர் முன் பதிவு செய்தனர்.

ஆனால் 251 ரூபாய்க்கு அலைபேசி ஒன்றை விற்பது சாத்தியம் அல்ல என்றும் இதனை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் எவ்வாறு செயல்படுத்த இருகின்றார்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம் என்று பல அலைபேசி தாயாரிப்பு நிறுவனங்கள் கூறியிருந்தனர். மேலும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு சரியான அலுவலகமே இல்லை என்றும், இருக்கும் அலுவலகத்திலும் எப்போதாவது தான் பணியாளர்கள் இருகின்றனர் என்றும் முதர்கட்டமாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் வழங்கிய அலைபேசிகள் அட்காம்(ADCOM) நிறுவன அலைபேசி என்றும் அதற்கு மேல் நிறம் பூசி விற்றுவிட்டனர் என்றும் இன்னும் அடுத்தடுத்து பல எதிர்மறை செய்திகள் தினந்தோறும் வெளிவரத் தொடங்கின.

இதனை அடுத்து தற்பொழுது இந்த நிறுவனம் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழவே அலைபேசி வாங்க பதிவு செய்து முன்பணம் கட்டியவர்களின் பணத்தை திரும்ப கொடுக்க முடிவெடுத்துள்ளது அந்நிறுவனம். CC Avenue ஆன்லைன் போர்டல் மூலம் 14800 வாடிக்கையாளர்கள் செய்த 30000 பணம் பரிவர்த்தனம் மூலம் பெறப்பட்ட 84 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க இருக்கிறது ரிங்கிங் பெல்ஸ். இதனை CC Avenue அறிவித்துள்ளது. திங்கள் கிழமையுடன்  இந்த பணம் மொத்தமும் திருப்பி செலுத்தப்பட்டிருக்கும் என்று காங்கிரஸ் அமைச்சர் திவாரி தெரிவித்திருந்தார். எப்படியாகினும் கேஷ் ஆண் டெலிவரி மூலம் அலைபேசியை பதிவு செய்தவர்களுக்கான அலைபேசிகளின் விற்பனை நிறுத்தப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபிரீடம் 251 அலைபேசியை பா.ஜ.க வை சேர்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிமுகப்படுத்துவதாக இருந்தது. பின்னர் அவர் கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.