கோரக்பூர்: பல குழந்தைகளை காப்பாற்றியவர் கஃபீல் கான் – விசாரணைக் குழு

0
  • ஆக்ஸிஜன் கொள்முதல் செய்யும் பணி மருத்துவர் கஃபீல்கானுக்கு ஒதுக்கப்படவில்லை.
  • குழந்தைகள் இறந்த பிரிவிலும் கஃபீல்கான் பணியாற்றவில்லை.
  • குழந்தைகள் இறப்புக்கும், கஃபீல்கானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 70 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்தன. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கு, மருத்துவமனை நிர்வாகம் பணம் அளிக்காததால் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, டாக்டர்.கஃபீல் கான் தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி மேலும் குழந்தைகள் பலியாகாமல் தடுத்தார். இதனை அறிந்த மதவாத பாஜக யோகி ஆதித்ய நாத் அரசு, குழந்தைகளை காப்பாற்றிய கஃபீல் கான் மீதே குற்றம்சாட்டி கைதும் செய்தது.

இதுதொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் கொள்முதல் செய்யும் பணி, மருத்துவர் கஃபீல்கானுக்கு ஒதுக்கப்படவில்லை. மேலும், குழந்தைகள் இறந்த பிரிவிலும் அவர் பணியாற்றவில்லை. குழந்தைகள் இறப்புக்கும், அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதனால் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதற்கான உத்தரவும் கஃபீல்கானுக்கு வழங்கப்பட்டது என்றனர்.

இது குறித்து கஃபீல் கான் கூறுகையில், ‘குழந்தைகள் உயிரிழப்புக்கும், எனக்கும் தொடர்பில்லை என்று கடந்த ஆண்டு எனக்கு ஜாமீன் அளித்தபோதே அலாகாபாத் நீதிமன்றம் கூறியது. இப்போது விசாரணை அதிகாரிகளும் கூறிவிட்டனர். இன்னும் என்னை பணியில் மீண்டும் சேர்க்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை என்றார்.

Comments are closed.