29 உயிர்களை பலிகொண்ட மதுரா வன்முறையாளர்களுக்கு பயிற்சி கொடுத்தது ஆர்.எஸ்.எஸ்.

0

மதுராவின் ஜவஹர் பாக்கில் நில ஆக்கிரமிப்பு செய்த ராம் விரிக்ஷ் யாதவின் ஆதரவளர்களுக்கும் காவல்துரையினர்களுக்கும் நடந்த மோதலில் 29 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்ட ராம் விரிக்ஷ் யாதவின் ஆதரவாளர்களுக்கு பயிற்சியளித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் என்று ராம் விரிக்ஷ் யாதவின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராம் விரிக்ஷ் யாதவின் பாதுகாப்பு அதிகாரி விரேஸ் யாதவ் இது குறித்து கூறுகையில் ஆக்ராவை சேர்ந்த ராஜ்விர் சிங் என்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் ஜவஹர் பாக் இல் இருந்தவர்களுக்கு பயிற்சியளித்து வந்தார் என்று கூறியுள்ளார். விரேஸ் யாதவை சர்தார் பஜார் காவல்நிலை எல்லையில் உள்ள பாலாஜிபுறம் காலனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவருடன் இவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி பப்லூ குமார் கூறுகையில், ராஜ்விர் சிங் என்கிற அந்த நபரை தாங்கள் தேடி வருவதாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் அவருக்குமான தொடர்பு குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.