பெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்

0

பெங்களுரிலுள்ள அக்ரஹாரா பகுதியில் ஏராளமான இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களை அனைவரும் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அப்பகுதி பாஜக எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவளி, வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் வதந்தி பரப்பியுள்ளார்.

எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசு, இஸ்லாமிய மக்கள் வசிக்கும் அக்ரஹாரா பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம், குடிநீர் இணைப்பு ஆகியவற்றை, மாநகராட்சி அதிகாரிகள் மூலம் துண்டித்தது.

அங்கு 300 குடும்பங்கள் வரை வசித்து வந்த குடியிருப்புக்களை இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளது பாஜக அரசு. மேலும் இங்கு வசித்து வந்த இஸ்லாமியர்களை, ‘உடனடியாக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்றும் காவல்துறை மூலம் உத்தரவிட்டுள்ளது.

“நாங்கள் அனைவரும் கர்நாடக மக்கள். நாங்கள் இந்தியர்கள் என்பதற்கு, ஆதார், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களும்உள்ளன. ஆனால், மத அடையாளங்களை வைத்து, எங்களை வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி, வீடுகளை இடித்துள்ளனர். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது” என்று பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக எம்எல்ஏ அரவிந்த் புகாரில் உண்மை உள்ளதா? இங்கு வசிப்பவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்தானா? என்பதை முறைப்படி விசாரணை செய்யாமல் கர்நாடக பாஜக அரசு அப்பாவி மக்களின் வீடுகளை இடித்துள்ளது.

Comments are closed.