3000 முஸ்லிம்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் கைது

0

 

மூவாயிரம் முஸ்லிம்களை கொலை செய்ய சமூக வலைதளமான டிவிட்டரில் அழைப்பு விடுத்த பா.ஜ.க. இளைஞர் அணி துணைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 2 அன்று அமிதேஷ் சிங் இந்த பதிவை இட்டதை தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அஸ்ஸாமை சேர்ந்த சமூக ஆர்வலர் நிலிம் தத்தா இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

புனே நகரின் சைபர் குற்றப்பிரிவு அமிதேஷ் மீது வழக்கு பதிவு செய்தது. இதனை தொடர்ந்து அமிதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா யுவ மோச்சாவின் புனே நகர துணை தலைவர் என்று அமிதேஷ் தன்னை அறிமுகம் செய்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி இதனை மறுத்துள்ள போதும் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக அமிதேஷ் மீது எவ்வித புகாரும் அளிக்கவில்லை. கல்லூரியில் படிக்கும் 20 வயது இளைஞனான அமிதேஷின் இந்த பதிவு மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு போதுமானது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.tweets

தனக்கும் இந்த டிவிட்டர் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தன்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் அமிதேஷ் முதலில் தெரிவித்தார். ஆனால் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து அதற்காக மன்னிப்பு கேட்டு அமிதேஷ் இட்ட பதிவுகள் அவரின் கூற்றை மறுப்பதாக உள்ளன.

Comments are closed.