36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்

0

தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள்தான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக அதிகமான கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. ஆனால், 36 தொழிலதிபர்கள் சமீப காலங்களில் தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் தொடர்புடையதாக டெல்லியை சேர்ந்த இடைத்தரகர் சுசன் மோகன் குப்தா என்பவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குப்தாவிற்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் சிங், மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி மற்றும் சன்டேசரா சகோதரர்கள் உள்ளிட்டவர்களும் நாட்டை விட்டு ஓடியவர்கள் தான்.

இதுபோன்று 36 தொழிலதிபர்கள் கடந்த சில ஆண்டுகளில் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளனர் என்றார். அமலாக்கதுறை வழக்கறிஞர் சாம்வேத்னா வர்மா நீதிமன்றத்தில் கூறுகையில், ‘விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து குப்தாவின் ஜாமீன் மனுவை 20ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த 36 பேர் யார், அவர்கள் எத்தனை லட்சம் கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்தனர் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Comments are closed.