400 க்கும் மேலான பாலஸ்தீனிய சிறுவர்கள் இஸ்ரேலிய சிறையில் வாடுகிறார்கள்

0

இந்த வருடம் மட்டுமே 11 இல் இருந்து 17 வயதுக்குள்ளான சிறுவர்கள் குறைந்த பட்சம் 700 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. இதில் பாதிக்கும் அதிகமானோர் இன்னும் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த கைதுகள் இஸ்ரேலால் கிழக்கு ஜெருசலத்தில் இருந்தும் மேற்கு கரையில் இருந்தும் 2015 இல் இருந்து செய்யப்பட்டவை என்று அரசு சாரா நிறுவனமான பாலஸ்தீனிய கைதிகள் சமூகம் தெரிவித்துள்ளது. தற்பொழுது 400 க்கும் அதிகாமான சிறுவர்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அது கூறியுள்ளது. இதில் பெரும்பாலான சிறுவர்கள் இஸ்ரேலிய ராணுவத்தினரால் சுட்டு பிடிக்கப்பட்டவர்கள் என்றும் அது கூறியுள்ளது.
கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மிகவும் மோசமான நிலையில் இஸ்ரேலிய சிறையில் இருக்கிறார்கள் என்றும் குறிப்பாக ஹிஸ்ரோன், ஓஃபர், மெகிட்டோ மற்றும் ஜஃப்ரோன் சிறை ஆகிய நான்கு சிறைகளில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது,

Comments are closed.