4,00,000 இஹ்வானுல் முஸ்லிம் இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த எகிப்து மந்திரி

0

எகிப்தின் நீதித் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அஹமத் அல் ஜென்ட் என்பவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் 400000 இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரை கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த அமைப்பினரை தீவிரவாதிகள் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறுகையில் “இறைவன் மீது ஆணையாக, கொல்லப்பட்ட ஒவ்வொரு ராணுவ வீரனுக்காக 10000 இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரை கொல்லாதவரை என் இதயத்தில் எரியும் நெருப்பு அணையாது” என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கு ” ஆனால் மொத்தம் 10000 இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினர் தானே இருக்கின்றனர்” என்று நிகழ்ச்சியின் நெறியாளர் கூறிய பொழுது “அந்த இயக்கத்தினரை மட்டும் அல்ல, அவர்களை ஆதரிப்பவர்கள், அவர்களை விரும்புபவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இஹ்வானுல் முஸ்லிமீன் தலைவர்களுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்படுமானால் தான் தன் பதவியை விட்டு ராஜினாமா செய்து விடுவதாக கூறியுள்ளார். மேலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் ஜனாதிபதியான முஹம்மத் மோர்சி கொல்லப்படுவதை தான் உறுதி செய்வேன் என்று அவர் சத்தியம் செய்திருப்பதாக கெய்ரோவை மையமாக செயல்படும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது எகிப்தை ஆளும் சர்வாதிகாரி சிசி கடந்த 2013 ஜூலை மாதத்தில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மத் மோர்சி தலைமையிலான மக்களாட்சியை ராணுவம் மூலம் கவிழ்த்து தன்னைத் தானே ஜானாதிபதி என்று அறிவித்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சுமார் 1150 மேலானோர் கொல்லப்பட்டும் 40000 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் மேலும் நூற்றுக் கணக்கானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும் உள்ளது. இந்த அஹ்மத் அல் ஜென்ட் என்பவர் ஒரு நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.